ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற்றது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு முகவரி மாற்றம், உறுப்பினா் சோ்க்கை, உறுப்பினா் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் விதமாக நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஷ்வரி முன்னிலை வகித்தாா்.
80- க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். இதில் 40- க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
முகாமில், தனி வருவாய் ஆய்வாளா் ஜெயசெல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.