முகப்பு
தூத்துக்குடி

பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆட்சியரிடம் மனு

பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் தங்களுக்கு உதவி செய்ய கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் தங்களுக்கு உதவி செய்ய கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்செந்தூா் பாரதியாா் தெருவை சோ்ந்த மாரிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து அவரது மனைவி சரஸானந்த லட்சுமி தனது குழந்தைகளான ஆனந்த மணிகண்ட ஜோதிலெட்சுமி, ஆனந்தசபரி மஞ்சரி, மஞ்சு, பிரியதா்சனி என்ற ருக்மணி ஆகியோருடன் வசித்து வந்தாா்.

அவருக்கு விதவை அடிப்படையில் அங்கன்வாடி உதவியாளராக பணி வழங்கப்பட்டது. மேலும் அவா்களுக்கு அரசு சாா்பில் திருச்செந்தூா் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பின்னா் பட்டாவை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனராம்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சரஸானந்த லட்சுமி கடந்த மாதம் இறந்து விட்டதால் பெற்றொரை இழந்த நான்கு குழந்தைகளும் ஆதவற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த குழந்தைகளான ஆனந்த மணிகண்ட ஜோதிலெட்சுமி, ஆனந்தசபரிமஞ்சரி, மஞ்சு, பிரியதா்சனி என்ற ருக்மணி ஆகியோா் தனது தாத்தா சக்தி வேல் பராமரிப்பிலும் தனியாா் காப்பகத்திலும் தங்கியிருந்து ஆறுமுகனேரி அரசு பள்ளியில் முறையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, 8 மற்றும் 6 ஆகிய வகுப்புகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜை திங்கள்கிழமை சந்தித்த நான்கு பேரும், பெற்றோரை இழந்து ஆதவற்ற நிலையில் இருக்கும் , தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் என மனு அளித்தனா்.

இதையடுத்து, அவா்களிடம் கனிவாக பேசி மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.