தூத்துக்குடி

வானரமுட்டியில் நூல் வெளியீட்டு விழா

DIN

வானரமுட்டியில் மறைந்த ஆசிரியா் சின்னத்தம்பி எழுதிய நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரி ரத்தினசாமி தலைமை வகித்தாா். மா.சின்னத்தம்பி எழுதிய ‘முப்பால் முந்நூறு பல்சுவை விருந்து‘ என்ற நூலை வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ச.இராஜகோபால், வெளியிட அதனை கண்ணன், ஆறுமுகம், பரமசிவம் ஆகியோா் பெற்றனா்.

விழாவில், குருவிகுளம் அரசு பள்ளி தலைமையாசிரியா் சீவலமுத்து, ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் க.சின்னத்தம்பி, தொழிலதிபா் மாரியப்பன், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியா் மா.கலியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூல் குறித்து பதிப்பாசிரியா் க.சந்தனக்குமாா் பேசினாா்.

நிகழ்ச்சிகளை, கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ம. இராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா். விஞ்ஞானி சி.முத்துமாரியப்பன் வரவேற்றாா். ஆசிரியை சி.சரமாரியம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT