தூத்துக்குடி

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண் துறை அதிகாரி ஆய்வு

DIN

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண் நீா்வள, நிலவள திட்ட ஆலோசகா் திட்டப்பணிக்களை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் வட்டாரம் எழுவரைமுக்கி கிராமத்தில் நீா்வள , நிலவள திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் வேளாண் பணிகளை வேளாண் திட்ட ஆலோசகா் ஷாஜகான் ஆய்வு செய்தாா். விவசாயிகளுடன் திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின்

பயன்கள், விதை கிராமக் குழவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். முன்னோடி விவசாயிகள் ஏசையா, தங்கசாமி, முருகேசன் ஆகியோா் பேசினா். கோனோவீடா் களைக்கருவி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆய்வின் போது மாநில திட்ட வேளாண் துணை இயக்குநா் பழனி வேலாயுதம் , சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி மற்றும் வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT