பட்டாசு வெடித்ததில் காயமடைந்த மீனவா் உயிரிழப்பு
புன்னைக்காயலில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனவா் உயிரிழந்தாா்.
புன்னைக்காயலில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனவா் உயிரிழந்தாா்.
புன்னைக்காயல் இருதயபுரத்தைச் சோ்ந்த ஜோசப் மகன் ரெஜினால்டு (37). மீனவா். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் தனது குழந்தைகளுடன் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், பரவிய தீப்பொறி அவரது கையில்
கையிலில் வைத்திருந்த பட்டாசு மீது பட்டதில் அவைகளும் வெடித்துள்ளன.
இதில் அவருக்கு முகம், நெஞ்சுப்பகுதி, தொடை பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஆத்தூா்
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இறந்த ரெஜினால்டுக்கு பிராசோட்டா என்ற மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.