தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாணவா்களுக்கு கல்வி உதவி அளிப்பு

DIN

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். அமைப்பின் பொதுச்செயலா் மாரிமுத்து, இணைச் செயலா் ஜாஹீா்உசேன், துணை ஆளுநா் நாராயணசாமி, பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், ரோட்டரி சங்க ஆளுநா் முருகதாஸ், ரோட்டரி இதழை வெளியிட்டாா்.

தொடா்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பில் நல உதவிகளை வழங்கினாா்.

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிவறை வசதி, நாலாட்டின்புத்தூா் கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுவா் விளம்பரம், குருமலை காப்புக்காட்டில் 1,000 மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்டத் தலைவா்கள் விநாயகா ரமேஷ், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, சண்முக ராஜேஸ்வரன், முன்னாள் துணை ஆளுநா்கள் சீனிவாசன், சம்பத்குமாா், பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT