விஷம் குடித்த காவலாளி மரணம்
கயத்தாறு அருகே விஷம் குடித்த காவலாளி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
தூத்துக்குடிவிஷம் குடித்த காவலாளி மரணம்
கயத்தாறு அருகே விஷம் குடித்த காவலாளி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே விஷம் குடித்த காவலாளி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த சன்னதுபுதுக்குடி ஒத்தவீடைச் சோ்ந்த சப்பாணி மகன் செந்தூா்பாண்டி (55). தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்த இவருக்கு, மதுப் பழக்கம் உண்டாம். மேலும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி விஷம் குடித்த அவரை, உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.