வினா - விடை வங்கி... நடப்பு நிகழ்வுகள் - 1
நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினா - விடை வங்கி...
1. 159-வது சர்வதேச பிரம்மஞான சபை மாநாடு நடைபெற்ற இடம் எது?
(A) நியூயார்க்
(B) மேற்கு வங்காளம்
Advertisement
Advertisement
(C) டெல்லி
(D) சென்னை
2. கூற்று: உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் ஜனவரி மாதம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொடங்கப்பட்டது
காரணம்: ஒரு மாத காலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பங்களும் மூன்று முக்கிய விருப்பங்களை பட்டியலிட்டு 2030 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் வளர்ச்சி தொலைநோக்கு பார்வையை வடிவமைப்பதே இதன் நோக்கம்.
(A) ஒன்று மட்டும் சரி
(B) இரண்டு மட்டும் சரி
(C) இரண்டும் சரி
(D) இரண்டும் தவறு
3. அயலகத் தமிழர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
(A) ஜனவரி 9
(B) ஜனவரி 12
(C) ஜனவரி 27
(D) ஜனவரி 15
4. இதில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து எது?
(A) பெனட்ரில்
(B) காஃப்சில்
(C) அல்மாண்ட்கிட்
(D) க்ரக்ஸ்
5. அல்மாண்ட் கிட் என்ற இருமல் மருந்தில் கலந்திருந்த நச்சு இரசாயனம் எது?
(A) எத்திலீன் கிளைகோல்
(B) அமோனியம்
(C) மெர்குரி
(D) அமோனியம் அசிடேட்
6. பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) திருப்பூர்
(B) கோயம்புத்தூர்
(C) விருதுநகர்
(D) கரூர்
7. இந்திய உலகளாவிய கல்வி உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?
(A) பூனே
(B) மும்பை
(C) டெல்லி
(D) சென்னை
8. இந்தியாவின் முதல் உயிரி - மகிழ்ச்சி மாவட்டமாக உருவாகும் நகரம் எது?
(A) கேயி பினியூர்
(B) அமர்நாத்
(C) அலகாபாத்
(D) நீலகிரி
9. இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் ஏடிஎம் வாகனத்தை அறிமுகப்படுத்திய வங்கி எது?
(A) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
(B) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
(C) பஞ்சாப் நேஷனல் வங்கி
(D) திரிபுரா கிராம வங்கி
10. இந்தியாவின் இஞ்சி தலைநகரம் எது?
(A) பூனே
(B) மிசோரம்
(C) லக்னோ
(D) ஈரோடு
11. இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி இரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட வழித்தடம் எது?
(A) ஹவுரா - குவாஹாட்டி
(B) மும்பை - பெங்களூரு
(C) மும்பை - சென்னை
(D) டெல்லி - சென்னை
12. முதல் பூஜ்ஜிய புதிய கழிவுகள் கொட்டப்படும் நகரம் எது?
(A) சண்டீகர்
(B) சூரத்
(C) லக்னோ
(D) பாட்னா
13. 2026 - குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினர் யார்?
(A) ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் & ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
(B) சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்
(C) உலக வங்கியின் தலைவர்
(D) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
14. கேண்டிடா ஆரிஸால் என்பது ஒருவகை.......
(A) வைரஸ்
(B) பூஞ்சை
(C) பாக்டீரியா
(D) புழு
15. இந்தியாவில் தற்போதுள்ள சக்திவாய்ந்த மீக்கணினி எது?
(A) பரம் சித்தி
(B) பிரத்யுஸ்
(C) பரம் ருத்ரா
(D) பரம் 8000
16. கூற்று 1: நீதிபதி கீதா மிட்டல் குழு மெய்டே - குகி மோதல் நடவடிக்கையை கண்காணித்து வருகிறது.
கூற்று 2: இது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதை மேற்பார்வையிடுகிறது.
(A) ஒன்று மட்டும் சரி
(B) இரண்டு மட்டும் சரி
(C) இரண்டும் சரி
(D) இரண்டும் தவறு
17. சாதாரண மசோதாக்கள் மிதான முட்டுக்கட்டையைத் தீர்க்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு அமர்விற்கான இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
(A) பிரிவு 106
(B) பிரிவு 107
(C) பிரிவு 108
(D) பிரிவு 109
18. நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை முறை கூட்டு அமர்வுகள் நடைபெற்றுள்ளன?
(A) 5
(B) 4
(C) 2
(D) 3
19. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றாக உரையாற்ற வேண்டும் என எந்த அரசியலமைப்புப் பிரிவு கூறுகிறது?
(A) பிரிவு 78
(B) பிரிவு 76
(C) பிரிவு 87
(D) பிரிவு 89
20. அரசியலமைப்பு விவாதத்தை தூண்டும் ஆளுநர் சட்டமன்ற வெளிநடப்பு எந்தெந்த பிரிவுகளை அரசியலமைப்பில் கேள்விக்குறியாக்கியுள்ளது?
(A) பிரிவு 175 & 162
(B) பிரிவு 176 & 163
(C) பிரிவு 176 & 162
(D) பிரிவு 175 & 163
21. ஆளுநரின் உரையுடன் தொர்புடைய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
(A) சட்டப்பிரிவு 175
(B) சட்டப்பிரிவு 176
(C) சட்டப்பிரிவு 177
(D) சட்டப்பிரிவு 178
22. அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் ஆளுநர் செயல்படுவதற்கான இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
(A) சட்டப்பிரிவு 163
(B) சட்டப்பிரிவு 164
(C) சட்டப்பிரிவு 165
(D) சட்டப்பிரிவு 166
23. அமலாக்க இயக்குநரகம் எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது?
(A) உள்துறை அமைச்சகம்
(B) பாதுகாப்புத் துறை அமைச்சகம்
(C) வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
(D) நிதி அமைச்சகம்
24. ஜீவா திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது?
(A) விவசாயம்
(B) சூரிய சக்தி
(C) சுகாதாரம்
(D) இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்
25. பிரகதி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
(A) 2026
(B) 2015
(C) 2025
(D) 2018
விடைகள்
1. (D) சென்னை
2. (C) இரண்டும் சரி
3. (B) ஜனவரி 12
4. (C) அல்மாண்ட்கிட்
5. (A) எத்திலீன் கிளைகோல்
6. (C) விருதுநகர்
7. (D) சென்னை
8. (A) கேயி பினியூர்
9. (D) திரிபுரா கிராம வங்கி
10. (B) மிசோரம்
11. (A) ஹவுரா - குவாஹாட்டி
12. (C) லக்னோ
13. (A) ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் & ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
14. (B) பூஞ்சை
15. (A) பரம் சித்தி
16. (C) இரண்டும் சரி
17. (C) பிரிவு 108
18. (D) 3
19. (C) பிரிவு 87
20. (B) பிரிவு 176 & 163
21. (B) சட்டப்பிரிவு 176
22. (A) சட்டப்பிரிவு 163
23. (D) நிதி அமைச்சகம்
24. (A) விவசாயம்
25. (B) 2015