மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்!
மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு தகவல்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 1 முதல் பயன்பாட்டு வரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மதுரை தோப்பூரில் கடந்த 2019 ஜனவரி 27 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதன்பின்னர் அடிக்கல் நாட்டப்பட்ட அஸ்ஸாம், குஜராத், ஜம்மு ஆகிய பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடைந்துவிட்டன.
Advertisement
Advertisement
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை தற்காலிக வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஏற்கெனவே மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தற்காலிக வகுப்புகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, புறநோயாளிகள் பிரிவைத் தொடங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பதில் பெற்று, செப். 17 அன்று தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் துணை இயக்குநர் அளித்த பதில் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒட்டுமொத்த கட்டுமானத்தில் 57 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. வருகின்ற ஜனவரி 1, 2027 முதல் மதுரை எய்ம்ஸில் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Madurai AIIMS Outpatient Department to start on January 1!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.