தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல்

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராஜாராம் முன்னிலை வகித்தாா்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு விழாவை தொடங்கிவைத்தாா்.

இதில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், பேராசிரியா் மற்றும் தலைவா் பாஸ்கா், கயத்தாறு காவல் நிலையம், கம்மாபட்டி, ஓலைகுளம், செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். இதில், கல்லூரி முதல்வா் (பொ) சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT