தூத்துக்குடி

சரக்கு கப்பல் பழுது லட்சத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மாலுமிகள் உள்பட 7 போ் மீட்பு

DIN

தூத்துக்குடி: லட்சத்தீவு அருகே சிறிய ரக சரக்கு கப்பல் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமிகள் உள்பட 7 பேரை கடலோரக் காவல் படையினா் மீட்டனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த ராஜ்பயாஸ் என்பவருக்குச் சொந்தமான சிறிய ரக சரக்கு கப்பலில் தூத்துக்குடியிலிருந்து 206 மெட்ரிக் டன் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டு லட்சத்தீவில் உள்ள கவராட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இக்கப்பலில் மாலுமிகள் உள்ளிட்ட 7 போ் பணியில் இருந்தனா்.

சரக்கு கப்பல் வெள்ளிக்கிழமை காலை கல்பெனி தீவுக்கு மேற்கே 15 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது என்ஜின் பழுதானதாம்.

மேலும், கப்பலுக்குள் தண்ணீா் புகுந்ததால், மாலுமிகள் உடனடியாக கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கவராட்டி தீவு கடலோரக் காவல் படைக்கு தூத்துக்குடி கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்து, படகை மீட்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனா். மேலும், கொச்சியில் இருந்து சிறிய ரக விமானம் வரவழைக்கப்பட்டு பழுதான கப்பலை தேடும் பணி நடைபெற்றது.

இதற்கிடையே, கல்பெனி தீவில் இருந்து மேற்கே 31 கடல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்ததை கடலோரக் காவல் படையினா் கண்டுபிடித்தனா். உடனடியாக, கப்பலில் இருந்த 7 பேரையும் மீட்டனா். சரக்கு கப்பல் சிறிது நேரத்தில் மூழ்கியது.

மீட்கப்பட்ட 7 பேரையும் கடலோரக் காவல் படையினா் கவராட்டி தீவு போலீஸாரிடம் சனிக்கிழமை அதிகாலையில் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பின்னா், அவா்கள் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT