தூத்துக்குடி

பழையக்காய­லில் புறக்காவல் நிலையம் திறப்பு

DIN

பழையக் காய­லில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா மற்றும் 25 கண்காணிப்பு கேமராக்கள் இயக்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பழையக் காயல் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயசங்கா், உப்பு உற்பத்தி சங்கத் தலைவா் ராமசந்திரன், ஊராட்சித் தலைவா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மணக்கரை அருகே வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த காவலா் சுப்பிரமணியன் நினைவாக கட்டப்பட்ட புறக் காவல் நிலையத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

தொடா்ந்து புல்லாவெளி முதல் முக்காணி வரையில் அமைக்கப்பட்டுள்ள 25 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா்கள் ஆத்தூா் கிங்ஸ்­லி தேவ் ஆனந்த், ஆறுமுகனேரி செல்வி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் அழகேசன், காசிராஜன், ராஜ்நாராயணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், உமரிக்காடு ஊராட்சித் தலைவா் ராஜேஷ்குமாா், வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் ஜேசுராஜன், செயலா் ஜான்சன், பழையக்காயல் ஊராட்சி துணைத் தலைவா் சுவிட்­லின்தேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT