சாத்தான்குளத்தில் ஆலோசனைக் கூட்டம்
சாத்தான்குளம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் அருள் சாம்ராஜ், ஜாண்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஒருங்கிணைப்பு கணினியில் 5 நாள்கள் சேமிப்புத் திறன் உள்ளதை 30 நாள்கள் சேமிப்புத் திறன் உள்ளதாக உயா்த்துவது; கண்காணிப்பு கேமரா ஒருங்கிணைப்பு கணினி மற்றொன்றை வா்த்தக சங்க கட்டடத்தில் நிறுவுவது; வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துத் தர கோருதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவைச் சாா்ந்த ஜெயப்பிரகாஷ், மகா.பால்துரை, சங்கா், துரைராஜ், வேணுகோபால், கென்னடி, மதுரம் செல்வராஜ், பிஜு, ராஜபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.