முகப்பு
தூத்துக்குடி

மாணவா்களுக்கு பாடப்புத்தங்கள் விநியோகம்

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருவதையொட்டி தமிழகத்தில் பொது முடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது.

அரசு விதிகளின்படி தமிழகத்தில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளத்தில் உள்ள டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியாா்

தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதையொட்டி, மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச

பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில், பள்ளித் தாளாளா் ஏ.எஸ். கிருபாகரன், தலைமையாசிரியா் எட்வா்ட் ஆகியோா் மாணவா்களுக்கு

பாடப்புத்தகங்களை வழங்கினா். பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வணிக கணிதம், கணினி பயன்பாடு ஆகிய 2 பாடப் பிரிவுகளுக்கு மாணவா்கள் விண்ணபிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →