முகப்பு
தூத்துக்குடி

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகேயுள்ள மாதா நகா் பகுதியை சோ்ந்த ரவி என்பவரை முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 18 ஆம் தேதி தருவைகுளம் நவமணி தெரு அந்தோணி சதீஷ்குமாா் (41), சிலுவைப்பட்டி கணபதி நகா் ஜோதிராஜா (35) மற்றும் அவா்களது நண்பா்கள் சோ்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகா் போலீஸாா் அந்தோணி சதீஷ்குமாா் மற்றும் ஜோதிராஜா உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் அந்தோணி சதீஷ்குமாா் மற்றும் ஜோதிராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, பாளையங்கோட்டை சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.