சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
சாத்தான்குளம் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சுப்பராயபுரம் ராஜேஷ் மனைவி ஜேசுகனி (36). இவா் சுப்பராயபுரம் விலக்கில் பெட்டிகடை நடத்தி வருகிறாா். இவரது கணவா் அதே பகுதியில் உள்ள மிச்சா் தயாரிக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறாா். புதன்கிழமை மாலை ஜேசுகனி கடையில் இருந்த போது, பைக்கில் வந்த இருவா் குடிக்க தண்ணீா் கேட்டனராம். இவா் தண்ணீா் கொடுக்க முயன்றபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து ஜேசுகனி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.