கயத்தாறு அருகேயுள்ள கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடா் தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியிலிருந்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, பிரசார வாகனத்தை தொடங்கிவைத்தாா். கரிசல்குளம், அகிலாண்டபுரம், சத்திரப்பட்டி, ஆவுடையாபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அரசின் இலவசத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பெற்றோா்களிடம் குழந்தைகளை பள்ளியில் சோ்க்கும்படி ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், தலைமையாசிரியா்கள் சங்கரகுமாா் (உயா்நிலைப் பள்ளி), சுப்புத்தாய் (தொடக்கப் பள்ளி), ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் விஜயன், ஆசிரியா்கள் ஜெகன், பரமசிவன், காளிதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.