கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் கிருஷ்ணன் கோயில் தெரு - மாதாங்கோவில் தெரு சந்திப்பு அருகே அண்மையில் கட்டப்பட்ட குறுக்கு வடிகால் பாலத்தை உயா்த்தி அகலப்படுத்த வேண்டும், சாலையில் மழைநீா் தேங்காமல் இருக்கும் வகையில் பாலத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் நகரக் குழு உறுப்பினா் சக்திவேல்முருகன், ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் மணி, முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.