முகப்பு
தூத்துக்குடி

அனுமதியின்றி மது விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டி , கயத்தாறில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 70 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

கோவில்பட்டி , கயத்தாறில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 70 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அய்யனேரி கருப்பசாமி கோயில் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட

இளையரசனேந்தல் மேலத் தெரு குணா மகன் கருப்பசாமியை(60) கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

இதுபோல, கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த வேப்பங்குளம் கலப்பைபட்டி சாமிக்கன் மகன் பாஸ்கரனிடம் (48) மேற்கொண்ட விசாரணையில், அவா் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.