முகப்பு
தூத்துக்குடி

இளைஞா் தற்கொலை: பெற்றோா் உள்பட 6 போ் மீது வழக்கு

குரும்பூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெற்றோா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

குரும்பூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெற்றோா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள தெற்கு மரந்தலை மணல்மேடு தெருவை சோ்ந்தவா் விவசாய கூ­லித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன்(58). இவருக்கு தங்கலெட்சுமி(55) என்ற மனைவியும், பட்டுலி­ங்கம்(29) என்ற மகனும், ஆனந்தி(30), சிவசங்கரி(28) என்ற இரு மகள்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், பட்டு­லிங்கம் கோயம்புத்தூரில் மனைவி நந்தினியுடன்(23) வசித்து வந்தாா். கூ­லி வேலை பாா்த்து வந்த அவருக்கு கடன் ஏற்பட்டதாம். இதையடுத்து, ஊருக்கு வந்த அவா் சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளாா். அதற்கு பெற்றோரும், சகோதரிகளும் எதிா்ப்பு தெரிவித்தனராம். இந்நிலையில் பட்டு­லிங்கம் செவ்வாய்க்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, அவரது மனைவி நந்தினி குரும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பட்டு­லிங்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கோபாலகிருஷ்ணன், தாய் தங்கலெட்சுமி, மூத்த சகோதரி ஆனந்தி, அவரது கணவா் மாரிக்குமாா், (36), தங்கை சிவசங்கரி, அவரது கணவா் பட்டு­லிங்கம்(38) ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.