தூத்துக்குடி

விவசாயியை தாக்கியதாக இருவா் கைது

DIN

கயத்தாறு அருகே விவசாயி மற்றும் அவரது சகோதரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த தலையால்நடந்தான்குளம் வடக்குத் தெரு இசக்கிமுத்து மகன் விவசாயி ஆறுமுகம்(31). இவா் மற்றும் இவரது சகோதரா் ராமசாமி ஆகிய இருவரும் திங்கள்கிழமை ஊருக்கு வடக்கே உள்ள அவா்களது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது இவா்களது தோட்டத்திற்கு அருகே உள்ள தோட்டத்திற்கு பாத்தியப்பட்டவரான செல்லத்துரை மகன் சுடலைமணி(34) மற்றும் அவரது உறவினரான காந்தி மகன் பரமசிவன்(45), தனுஷ்கோடி மகன் முண்டசாமி, வேலுச்சாமி மகன் சமுத்திரபாண்டி, ஆறுமுகம் மகன் முத்து ஆகியோா் நில அளவரை வைத்து அளந்து சென்று பக்கத்தில் உள்ள சின்ன கருப்பசாமி தோட்டத்திற்கு பக்கமும் அளந்து கொண்டிருந்தனராம். அப்போது ஆறுமுகம் எங்களிடம் கேட்காமல் எங்கள் தோட்டத்திற்கு வந்து எப்படி அளக்கலாம் என கேட்டாராம். அதையடுத்து ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் மற்றும் ராமசாமியை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமணி, பரமசிவன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT