முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

 கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் இணையதள வழியில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் இணையதள வழியில் நடைபெற்றது.

கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா், மாணவா்களின் வேலை வாய்ப்பு மற்றும் கல்லூரியின் இணையவழி கல்வி

முறை குறித்துப் பேசினா். இதில் கல்லூரி பேராசிரியா்கள், 167 முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிா்ந்து

கொண்டனா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் வி.ராஜேந்திரன், புகழேந்தி, ஸ்ரீதா், இசக்கிமுத்து ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

காயத்ரி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவருமான கே.ஜி.ஸ்ரீனிவாசகன் தலைமையில், தலைவா் ராஜேந்திரன், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.