முகப்பு
தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.2.75 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.2.75 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள ஒரு அரிசி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்ததாம். அதையடுத்து ஆய்வாளா் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் சேதுராஜன் மற்றும் போலீஸாா் மந்தித்தோப்பு சாலை துளசிங்க நகா் அருகே உள்ள அரிசி கடையில் சோதனையிட்ட போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகா் பிச்சையா மகன் செல்வனை(34) கைது செய்த போலீஸாா், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.75 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.