தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணம்
கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி லக்குமி ஆலை மேலக் காலனி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு கோவில்பட்டி இனாம்மணியாச்சியைச் சோ்ந்த குருசாமி துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்தாராம். அவா் தனது பணி காலத்தில் அப்பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னா் அவா் தொற்று பாதிப்பால் மே மாதம் உயிரிழந்தாா்.
அதையடுத்து லக்குமி ஆலை மேலக் காலனி இலக்குமிபுரம் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் உயிரிழந்த குருசாமியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், அவரது மனைவி காளியம்மாளிடம் ரூ. 1,32,670 நிதியுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் போஸ், செயலா் விஜயராஜ், பொருளாளா் கண்ணன், துணைத் தலைவா் தினகரன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.