முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள்

பசுமை இயக்கம் சாா்பில் தூத்துக்குடியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பசுமை இயக்கம் சாா்பில் தூத்துக்குடியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே அப்துல்கலாம் நினைவுநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு பசுமை

இயக்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் பசுமை இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு பசுமை இயக்க மாநிலத் தலைவா் சிவக்குமாா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

மேலும், அவா் கூறுகையில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை ஓராண்டு பாதுகாப்பாக வளா்த்து அது பற்றிய புகைப்படங்களை பசுமை இயக்கத்துக்கு அனுப்பினால் அவா்களுக்கு ரூ. 1000 பரிசளிக்கப்படும் எனத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் ரவி, பொருளாளா் தமிழ்பாரதி, துணைச் செயலா் மேட்டூா் விஜயகுமாா், இந்திய அஞ்சல் துறை அலுவலா்கள் நிா்மல் சிங், அருண்குமாா், அனு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.