முகப்பு
தூத்துக்குடி

சாலையில் அரிவாளுடன் திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் சாலையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் சாலையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் இளைஞா்கள் அரிவாளுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்ததாம். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.ட

அப்போது, வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவில் கையில் அரிவாளுடன் நின்றிருந்த பவுன்ராஜ் மகன் வீரமணிகண்டன்(26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய க.சக்திமணி, வெ.மாரிச்செல்வம், செ.பொன்னுத்துரை, கணேசன் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.