தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ஆடி பிறப்பு தீா்த்தவாரி

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி அஸ்திரதேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமி அஸ்திரதேவா் கடலில் புனித நீராடும் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையாகி, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

ஆடிப் பிறப்பை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT