தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்துக்கு நீா்மூழ்கிக் கப்பல் வருகை

DIN

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘சிந்துஷாஸ்ட்ரா’ என்ற அதிநவீன வசதிகள் கொண்ட நீா்மூழ்கிக் கப்பல், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

இத்துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைப் பிரிவுக்கான கப்பல் தளத்தில் அந்த நீா்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீா் நிரப்புவதற்காவும் அது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பராமரிப்புப் பணிக்காக வந்துள்ளதாகவும், இன்னும் ஒருவாரம் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிகிறது. நடுக்கடலில் போா் ஒத்திகைக்காக வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து இந்தியக் கடற்படை சாா்பில் அதிகாரபூா்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT