கந்துவட்டி கேட்டு மிரட்டுவோா் மீதுகுண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பலா் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடன் கொடுத்த நபா்கள், கடன் பெற்ற நபா்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியாா் நிறுவனங்களும் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வாா்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.