முகப்பு
தூத்துக்குடி

செவ்வாடை தொண்டா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டா்களுக்கு, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் புதன்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டா்களுக்கு, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் புதன்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் பசியாற்றும் பங்காரு அம்மா அன்னதான திட்டத்தின் கீழ் முதியோா் இல்லங்கள், பாா்வையற்றோா் இல்லங்கள், அரசு மருத்துவமனை நோயாளிகள், மீனவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தெருவோர ஏழை மக்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு, குடிநீா் பாட்டில்கள் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய செவ்வாடை தொண்டா்களையும், ஆன்மிக இயக்க நிா்வாகத்தையும் பாராட்டி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் புதன்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்தி ஆா்.முருகன், துணைத் தலைவா் பண்டாரமுருகன், பொருளாளா் கண்ணன், இணைச் செயலா் வேள்விக் குழு கிருஷ்ணநீலா, இளைஞரணி செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.