முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாமஸ் நகா் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும், அப் பகுதி பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அப்பகுதியிலேயே வேலை வழங்க வேண்டும், அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதில், ஊா் தலைவா் முத்துகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளைஞரணிச் செயலா் பிரபாவளவன், ஒன்றியச் செயலா் மாடசாமி, திமுக கிளைச் செயலா் அழகுராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் போராட்டக்குழுவினா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.