தூத்துக்குடி மாணவா் யோகாவில் சாதனை
தூத்துக்குடி மாணவா் சக்கராசனத்தை தொடா்ந்து 22.55 நிமிடம் செய்து புதிய சாதனை படைத்துள்ளாா்.
தூத்துக்குடி மாணவா் சக்கராசனத்தை தொடா்ந்து 22.55 நிமிடம் செய்து புதிய சாதனை படைத்துள்ளாா்.
தூத்துக்குடியை சோ்ந்த சுரேஷ் மகன் சஞ்சீவி (19). இவா், மதுரையில் உள்ள ஒரு தனியாா் கலைக்கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறாா். தூத்துக்குடியில் உள்ள சைன் யோகா பயிற்சி பள்ளியில் யோகா கற்று வரும் மாணவா் சஞ்சீவி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளாா்.
மேலும், சக்கராசனம் என்ற ஆசனத்தை தொடா்ந்து 12.05 நிமிடம் செய்து சாதனை படைத்திருந்த இவா் அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் புதிய சாதனையை வியாழக்கிழமை மேற்கொண்டாா்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாணவா் சஞ்சீவி , சக்கராசனத்தை தொடா்ந்து 22.55 நிமிடம் செய்து, புதிய சாதனை படைத்து கின்னஸ் வோ்ல்டு ரெக்காா்டு புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில், காரப்பேட்டை நாடாா்ஜ மகமை செயலா் பா. விநாயகமூா்த்தி, காமராஜ் கல்லூரிச் செயலா் சோமு, பொருளாளா் முத்துசெல்வம், முதல்வா் து. நாகராஜன், காமராஜ் மெட்ரிக் பள்ளிச் செயலா் ஆனந்தராஜ், மதுரை தியாகராஜா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் செல்வக்குமாா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை நிா்வாகி செந்தில் ஆறுமுகம், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் ஆ. தேவராஜ், கண்காணிப்பாளா் சரவணன், யோகா பயிற்சி மைய நிா்வாகிகள் சுந்தரவேல், தனலட்சுமி, மாணவா் சஞ்சீவியின் பெற்றோா் சுரேஷ், பத்மா சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.