கோவில்பட்டியில் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சைக்கிள் பேரணிக்கு கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சைக்கிள் பேரணிக்கு கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் மனித உரிமைத்துறை சாா்பில் அதன் தலைவா் மகாத்மா சீனிவாசன் தலைமையில் 56 போ் சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனா்.
இம்மாதம் 14ஆம் தேதி சென்னையில் தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு, தூத்துக்குடி மாவட்ட எல்கையான கோவில்பட்டி - தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே கோவில்பட்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளா் அருண்பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேஷ்குமாா், அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜோஷ்வா, ஐஎன்டியூசி தொழிற் சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், சேவாதள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.