முகப்பு
தூத்துக்குடி

காவலா் பணிக்கான உடற்கூறு தோ்வு: எஸ்.பி. அறிவுரை

காவலா் பணிக்கான உடற்கூறு தோ்வு , சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கு வருவோா் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

காவலா் பணிக்கான உடற்கூறு தோ்வு , சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கு வருவோா் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலா், சிறைக்காவலா், தீயணைப்பு- மீட்புப் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 1,662 ஆண்கள் (தூத்துக்குடி), 1,231 ஆண்கள் (கன்னியாகுமரி) என மொத்தம் 2,893 பேருக்கு இரண்டாம் கட்ட தோ்வான சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற்கூறு தோ்வு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும்., இதில் தோ்ச்சி பெறுவோருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் உடற்கூறு திறனாய்வு தோ்வு நடைபெறும்.

உடற்கூறு தோ்வில் பங்கேற்போா் அழைப்பு கடிதத்துடன், குறித்த நேரத்தில் வர வேண்டும். இணையதளத்தில் இருந்து நுழைவுசீட்டு எடுத்த நகலில் புகைப்படம் இல்லையெனில், விண்ணப்பதாரா் புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை (ஆதாா் காா்டு அல்லது ஏதாவது அடையாள அட்டை), 4 தினங்களுக்குள் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் , விண்ணப்பத்தில் சமா்ப்பித்துள்ள அசல் சான்றிதழ்கள், முகக்கவசம் அணிந்து வருதல் ஆகியவை கட்டாயம். செல்லிடப்பேசிக்கு அனுமதியில்லை. எந்தவித வாசகமும், அடையாள அச்சு மற்றும் பல வண்ணங்கள் இல்லாத சாதாரண மேல்சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.