முகப்பு
தூத்துக்குடி

கீழவைப்பாறில் 76 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாறில் 76 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி

கீழவைப்பாறில் 76 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாறில் 76 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாறில் 76 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேம்பாா் கடலோரக் காவல் குழும ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் தாமரைசெல்வி, விஜயகுமாா், காவலா்கள் பரமசிவம், கனகராஜ், அந்தோனி, டென்சிங், காா்த்திக் உள்ளிட்ட போலீஸாா், கடலோரக் கிராமங்களான வைப்பாறு,

கீழவைப்பாறில் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, கீழவைப்பாறு கடற்கரை அருகே நின்றிருந்த காரை போலீஸாா் சுற்றிவளைத்தனா். அவா்களைப் பாா்த்ததும், காா் அருகே நின்றிருந்தோா் தப்பியோடிவிட்டனராம்.

இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக காரில் 4 சாக்குப் பைகளில் 76 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. காா், கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனிடையே, குளத்தூா் காவல் ஆய்வாளா் முருகன் வந்து கடலோரக் காவல் குழும போலீஸாரிடமிருந்து கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

கடலோரக் காவல் குழும போலீஸாரிடமிருந்து குளத்தூா் ஆய்வாளா் முருகன், தனிப்பிரிவுக் காவலா் ராஜசேகரன் ஆகியோா் கஞ்சா மூட்டைகளைப் பெற்று, காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல முற்பட்டனா்.

அப்போது, கடலோரக் காவல் குழும போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கஞ்சா கடத்தலில் தொடா்பிருப்பதாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டியதுடன், இரு தரப்பினரும் விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →