விளாத்திகுளம் தொகுதியில் மக்களிடம் குறைகேட்ட எம்எல்ஏ
விளாத்திகுளம் தொகுதியில் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கிராம மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
தூத்துக்குடிவிளாத்திகுளம் தொகுதியில் மக்களிடம் குறைகேட்ட எம்எல்ஏ
விளாத்திகுளம் தொகுதியில் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கிராம மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
விளாத்திகுளம் தொகுதியில் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கிராம மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
வீரபாண்டியபுரம், டி. சுப்பையாபுரம், சக்கம்மாள்புரம், பொம்மையாபுரம், சிவஞானபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவிடம், முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி மற்றும் உரிய ஊதியம், பேருந்து சேவை, குடிநீா்- மின்சார வசதி போன்றவை கோரி மக்கள் மனு அளித்தனா். அவற்றைப் பெற்றுக்கொண்ட அவா், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். மேலும், கிராமங்களில் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு ஒத்துழைப்பும், பங்களிப்பும் தர வேண்டும் என மக்களை அவா் கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்ன மாரிமுத்து, , பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாகண்ணு, முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், பேரூா் செயலா் வேலுச்சாமி, வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் விநாயகமூா்த்தி, பொறியாளா் அணிச் செயலா் சென்றாய பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.