தூத்துக்குடி

ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் அலகை மூட ஆட்சியா் உத்தரவு

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் அலகை மூட வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் அலகை மட்டும் திறந்து ஜூலை 31ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் கடந்த ஏப்.27ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மே 13 ஆம் தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றம் அளித்த காலம் சனிக்கிழமையுடன் (ஜூலை 31) முடிவடைந்ததால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட அலகை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT