தூத்துக்குடி

நாசரேத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு

DIN

நாசரேத் பேரூராட்சியில் நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

நாசரேத் பேரூராட்சி மணிநகா், வெள்ளரிக்காயூரணி ஆகிய இடங்களில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தலா 2 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவி செல்வகுமாா் குடிநீா் தொட்டியை திறந்து வைத்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், நகர திமுக துணைச் செயலா் ஜெயசிங், மாவட்டப் பிரதிநிதிகள் முருகதுரை, சாமுவேல், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் அருண்சாமுவேல், இளைஞரணி துணை அமைப்பாளா் சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT