முகப்பு
தூத்துக்குடி

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு தெரிவிக்க வேண்டி, கோவில்பட்டி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் அளித்த மனுவில், தமிழகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசியை தடையின்றி வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்போது கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ், ஒன்றியத் தலைவா் ரமேஷ்மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.