முகப்பு
தூத்துக்குடி

கொலை முயற்சி: 3 போ் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தூத்துக்குடியில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சங்கா் (42). தொழிலாளி. இவா் கடந்த 2013 ஆம் ஆண்டு தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சோ்ந்த முத்து என்பவரை சிலருடன் சோ்ந்து கொலை செய்தாராம். இதுதொடா்பாக முத்துவின் மருமகன் விஜயகுமாருடன் சங்கருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், விஜயகுமாா், அவரது நண்பா்களான தொ்மல்நகா் கேம்ப் 2 பகுதியைச் சோ்ந்த உதயமூா்த்தி (21), தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த மூா்த்தி (20) ஆகியோா் செவ்வாய்க்கிழமை சங்கரின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம்.

இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸாா் தப்பியோடிய மூவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், தப்பியோடிய 3 பேரையும் தனிப்படையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.