சாத்தான்குளம், முதலூா் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மற்றும் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மற்றும் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். செல்வசக்தி மெடிக்கல் அறக்கட்டளை நிறுவன இயக்குநா் டாக்டா் செல்வசீதாராம், அவரது தந்தை சக்திபாலன் நினைவாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மற்றும் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக அரசு மருத்துவா்கள் ஆத்திக்குமாா், சுமதிபாஸ்கா் ஆகியோரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினாா்.
இதில், தொழிலதிபா்கள் பெரியசாமிநாதன், சக்திமுருகன், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், மாவட்ட பாஜக துணைத் தலைவா் கணேசன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் மகேஸ்வரன், மாவட்ட மருத்துவ பிரிவு செயலா் பூபதிபாண்டியன், ஒன்றிய பாஜக தலைவா் செந்தில், சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், ஜெயபால், செவிலியா்கள் அனிஷா, பாலிட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.