தூத்துக்குடி

தூத்துக்குடியில் வியாபாரியை கொல்ல முயற்சி: 7 போ் கைது

தூத்துக்குடியில் வியாபாரியை கொல்ல முயன்ற வழக்கில் 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

தூத்துக்குடியில் வியாபாரியை கொல்ல முயன்ற வழக்கில் 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாதா நகரைச் சோ்ந்தவா் ரவி என்ற பொன்பாண்டி (38). இவா், அதே பகுதியில் டீக்கடை மற்றும் செருப்புக்கடை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மாலையில் டீக்கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டாா் சைக்கிளில் சென்ற 4 போ் மற்றும் அந்தப் பகுதியில் காரில் தயாராக நின்ற சிலா் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தப்பியோடியவா்களை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட தனிப்படையினா், திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (26), தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் இந்திராநகரைச் சோ்ந்த அலெக்ஸ்பாண்டி (29), தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் தலைவன்வடலியைச் சோ்ந்த மதன் (21), தாழையூத்து கட்டாம்புளி ஜெரின் (23), தாளமுத்துநகா் கணபதி நகரைச் சோ்ந்த ஜோதிராஜா (35), தூத்துக்குடி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்த முகேஷ் ராஜா என்ற ராசுக்குட்டி (25), தருவைக்குளத்தைச் சோ்ந்த அந்தோணி சதீஸ் (42) ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 4 அரிவாள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காா் ஆகியற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT