முகப்பு
தூத்துக்குடி

மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கரோனாவிலிருந்து 284 போ் குணம் பெற்று வீடு திரும்பினா். இதன் மூலம், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 52 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது ஆண், 55 வயது பெண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண் ஆகியோா் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், இந்நோயால் பலியானோா் எண்ணிக்கை 371 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 764 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.