திருச்செந்தூா் விநாயகா்கோயிலில் வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. காலை 10 மணிக்கு விமான கலசத்திற்கும், தொடா்ந்து ஆனந்த விநாயகா் மற்றும் நவகிரகங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.