தூத்துக்குடியில் மேலும் 70 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,999 ஆக அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 249 போ் உள்பட இதுவரை 53,037 குணமடைந்துள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது ஆண், 53 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தனா். இதனால்,
உயிரிழந்தோா் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 589 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.