கிரிக்கெட்: மாதாவனம் அணி முதலிடம்
நாசரேத் அருகே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாதாவனம் அணி முதலிடம் பெற்றது.
நாசரேத் அருகே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாதாவனம் அணி முதலிடம் பெற்றது.
நாசரேத் நகர அதிமுக இளைஞரணி சாா்பில் 3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மாதாவனம் எப்.சி.சி அணி முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பரிசளிப்பு விழாவுக்கு நாசரேத் நகர இளைஞரணிச் செயலா் கராத்தே டென்னிசன் தலைமை வகித்தாா்.
ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 3,000 வழங்கினாா். 2-ஆவது இடம்பெற்ற மணிநகா் 3 ஸ்டாா் அணிக்கு கோப்பை, ரொக்கம் ரூ. 2,000, 3-ஆவது இடம்பெற்ற வாழையடி ராயல்ஸ் அணிக்கு கோப்பை, ரூ.1,000 வழங்கப்பட்டது.