தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வராமல் தடுக்க இரண்டு தவணைகள் கொண்ட தடுப்பூசியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. அடையாள அட்டையுடன் வருவோருக்கு பதிவு செய்து ஒதுக்கப்படும் தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூா் அரசு மருத்துவமனை, கருங்குளம் மேம்படுத்தப்படட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆழ்வாா்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முதலூா் அரசுஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை, ஓட்டபிடாரம் அரசு மருத்துவமனை, ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழஈரால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எட்டயபுரம் அரசு மருத்துவமனை, பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இதுதவிர, முக்கியமான தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.