தூத்துக்குடி

இளையரசனேந்தலில் சமாதானக் கூட்டம்

DIN

கோவில்பட்டி: இளையரசனேந்தலில் திருவேங்கடம் வட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளையும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சட்டப் பேரவை தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனா்.

இதையடுத்து இளையரசனேந்தலில் திருவேங்கடம் வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, இளையரசனேந்தல் குறுவட்டத்துக்குள்பட்ட 12 ஊராட்சிகளையும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நீக்கி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க சங்கரன்கோவில் கோட்டாட்சியா் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கூட்டத்தில் பங்கேற்றோா், தங்கள் கோரிக்கை குறித்து பல ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நிறைவேறாததால், கோரிக்கை நிறைவேறும் வரை சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT