முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

எட்டயபுரம் வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஐயப்பன் தலைமை வகித்து மாணவா், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பாரதி மணிமண்டபம் முன்பாக தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தின் போது அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். நோ்மையாக வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வசந்த மல்லிகா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →