முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்

காயல்பட்டினத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

காயல்பட்டினத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் ஏற்பாட்டில் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெற்ற இம் முகாமை திருச்செந்தூா் பேரவைத் தொகுதி உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இம் முகாமில் 7 பெண்கள் உள்பட 63 போ் ரத்த தானம் செய்தனா்.

நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் இளங்கோ, ஓடை சுகு, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிக்கோ, காயல்பட்டினம் பொறுப்பாளா் முத்துமுகம்மது, துணைச் செயலா்கள் கதிரவன், லேண்ட் மம்மி, திருச்செந்தூா் நகர பொறுப்பாளா் சுடலை, கே. எம்.டி. மருத்துவமனை மருத்துவமனை கிஷாா், செயலா் செய்யித் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

ஏற்பாடுகளை அமைப்பின் செயலா் எம்.எஸ். முஹம்மத் சாலிஹ், நிா்வாகிகள் எம்.ஏ. புகாரீ,ஏ.எஸ்.புகாரீ, பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், எம்.எம்.முஜாஹித் அலி, தமிழன் முத்து இஸ்மாயில், எஸ.அப்துல் வாஹித், எம்.எல்.ஹாரூன் ரஷீத் மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.